• Jan 11 2025

2025 நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தல்! - அநுர அரசு திட்டம்

Chithra / Dec 30th 2024, 11:39 am
image


1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப் பகுதியில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் தெரிவிக்கையில்,

"2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல் முறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை இரத்துச் செய்து பழைய மாகாண சபைத் தேர்தல் முறைக்கு மாற்றுவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்குப் பிறகுதான் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். எனினும், சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால் நாங்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் செயற்பாடுகளைத் தொடர முடியாது.

அதன் அடிப்படையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் முன்னாள் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை முன்னெடுப்பதாக இருந்தால் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அவசியமாகின்றது. ஆனால், அந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முழுமையாக முடிந்திருக்கவில்லை.

அத்தோடு அவ்விடயம் ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளது. ஆகவேதான் அந்த ஏற்பாடுகளைத் திருத்தியமைத்து பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்." - என்றார்.

2025 நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தல் - அநுர அரசு திட்டம் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப் பகுதியில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.இந்த விடயம் சம்பந்தமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் தெரிவிக்கையில்,"2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல் முறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை இரத்துச் செய்து பழைய மாகாண சபைத் தேர்தல் முறைக்கு மாற்றுவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்குப் பிறகுதான் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். எனினும், சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால் நாங்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் செயற்பாடுகளைத் தொடர முடியாது.அதன் அடிப்படையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் முன்னாள் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை முன்னெடுப்பதாக இருந்தால் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அவசியமாகின்றது. ஆனால், அந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முழுமையாக முடிந்திருக்கவில்லை.அத்தோடு அவ்விடயம் ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளது. ஆகவேதான் அந்த ஏற்பாடுகளைத் திருத்தியமைத்து பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement