• Oct 05 2024

மட்டக்களப்பில் விவசாயத்தில் ஈடுபடும் மாற்றுதிறனாளிகளுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

Sharmi / Feb 10th 2023, 4:11 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வீட்டுத்தோட்டம் செய்யும் விஷேட தேவையுடையோருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று சமுக பராமரிப்பு காரியாலயத்தில் இடம் பெற்றது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் விஷேட தேவையுடையோரை ஊக்குவிக்கும் முகமாகவும் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் 128 பேருக்கு வை.எம்.சி.ஏ. நிறுவனத்தின் அனுசரனையில் வீட்டுத் தோட்ட செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டுத்தோட்ட நடவடிக்கையில் ஈடுபடும் விஷேடதேவையுடைய 128 பேருக்கும் அரிசி, சீனி, பருப்பு, கடலை, தேயிலை, கோதுமை மா, சோயா மீட், சமபோச போன்ற பொருட்கள் ஒரு பொதி பத்தாயிரம் ரூபா பெறுமதியில் வழங்கி வைக்கப்பட்டது.

சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன், சமுக சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரேமானந்த சுதர்சினி, வை.எம்.சி.ஏ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பதில் பொது செயலாளர் எஸ்.பெற்றிக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


மட்டக்களப்பில் விவசாயத்தில் ஈடுபடும் மாற்றுதிறனாளிகளுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வீட்டுத்தோட்டம் செய்யும் விஷேட தேவையுடையோருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று சமுக பராமரிப்பு காரியாலயத்தில் இடம் பெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் விஷேட தேவையுடையோரை ஊக்குவிக்கும் முகமாகவும் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.இதன் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் 128 பேருக்கு வை.எம்.சி.ஏ. நிறுவனத்தின் அனுசரனையில் வீட்டுத் தோட்ட செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.வீட்டுத்தோட்ட நடவடிக்கையில் ஈடுபடும் விஷேடதேவையுடைய 128 பேருக்கும் அரிசி, சீனி, பருப்பு, கடலை, தேயிலை, கோதுமை மா, சோயா மீட், சமபோச போன்ற பொருட்கள் ஒரு பொதி பத்தாயிரம் ரூபா பெறுமதியில் வழங்கி வைக்கப்பட்டது.சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன், சமுக சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரேமானந்த சுதர்சினி, வை.எம்.சி.ஏ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பதில் பொது செயலாளர் எஸ்.பெற்றிக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement