• May 18 2024

13வது திருத்தத்தை எரித்த பிக்குவிற்கு எதிராக 21வழக்குகள் உள்ளன:வேற்று மத தலைவர்களால் இதை செய்ய முடியுமா - சபையில் சாணக்கியன் கேள்வி!

Sharmi / Feb 10th 2023, 4:15 pm
image

Advertisement

நாடாளுமன்றத்திற்கு முன்பாக அரசியலமைப்பின் ஒருபகுதியான 13வது திருத்தச் சட்டத்தை எரித்த பிக்குவிற்கு எதிராக 21 குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறு 21 வழக்குகள் உள்ள ஒரு புத்த பிக்கு நாடாளுமன்றத்திற்கு முன்பாக இவ்வாறு அரசியலமைப்பின் ஒரு பகுதியை எரித்த போது கைகட்டி வேடிக்கை பார்த்த அரசாங்கம் வேறு மதத்தலைவர்கள் வெற்று காகிதத்தை எரித்திருந்தால் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பார்கள் என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது 13வது திருத்தச்சட்டம் என்ற ஒன்றை பேசுபொருளாக்கியுள்ளதற்கு காரணம் அரசியல் அனாதைகள் வெறுங்கையுடன் செல்லாது எதையாவது ஒரு கோசத்தை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவே என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டில் அரசியல் சுதந்திரமும் இல்லை பொருளாதார சுதந்திரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

13வது திருத்தத்தை எரித்த பிக்குவிற்கு எதிராக 21வழக்குகள் உள்ளன:வேற்று மத தலைவர்களால் இதை செய்ய முடியுமா - சபையில் சாணக்கியன் கேள்வி நாடாளுமன்றத்திற்கு முன்பாக அரசியலமைப்பின் ஒருபகுதியான 13வது திருத்தச் சட்டத்தை எரித்த பிக்குவிற்கு எதிராக 21 குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.இவ்வாறு 21 வழக்குகள் உள்ள ஒரு புத்த பிக்கு நாடாளுமன்றத்திற்கு முன்பாக இவ்வாறு அரசியலமைப்பின் ஒரு பகுதியை எரித்த போது கைகட்டி வேடிக்கை பார்த்த அரசாங்கம் வேறு மதத்தலைவர்கள் வெற்று காகிதத்தை எரித்திருந்தால் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பார்கள் என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது 13வது திருத்தச்சட்டம் என்ற ஒன்றை பேசுபொருளாக்கியுள்ளதற்கு காரணம் அரசியல் அனாதைகள் வெறுங்கையுடன் செல்லாது எதையாவது ஒரு கோசத்தை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவே என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டில் அரசியல் சுதந்திரமும் இல்லை பொருளாதார சுதந்திரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement