• May 04 2024

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவை மீறிய அரச உத்தியோகத்தர்கள்! samugammedia

Chithra / Aug 28th 2023, 7:13 am
image

Advertisement

தமது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்காக வர்த்தக வகுப்பில் பயணிப்பதற்கு பதிலாக சிக்கன வகுப்பில் பயணிக்க வேண்டும், என்ற ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவை, சுமார் இருபது அரச உத்தியோகத்தர்கள் மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாட்டுப் பயணம் செய்ய விரும்பும் அரச பணியாளர்களுக்கு புதிய நினைவூட்டல் விரைவில் வழங்கப்படவுள்ளது.

அதே வேளையில், ஏற்கனவே சிக்கன வகுப்பில் பயணிக்காது, வர்த்தக வகுப்பில் பயணித்த அரச பணியாளர்களிடம் இருந்து, மேலதிக கட்டண வித்தியாசத்தை திருப்பிச் செலுத்துவதற்கான திறைசேரி சுற்றறிக்கையும் விரைவில் வெளியிடப்படும், என்று அரச தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரச செலவினங்களைக் குறைக்க நான்கு மாதங்களுக்கு முன்னர், திறைசேரியினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவை மீறிய அரச உத்தியோகத்தர்கள் samugammedia தமது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்காக வர்த்தக வகுப்பில் பயணிப்பதற்கு பதிலாக சிக்கன வகுப்பில் பயணிக்க வேண்டும், என்ற ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவை, சுமார் இருபது அரச உத்தியோகத்தர்கள் மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் வெளிநாட்டுப் பயணம் செய்ய விரும்பும் அரச பணியாளர்களுக்கு புதிய நினைவூட்டல் விரைவில் வழங்கப்படவுள்ளது.அதே வேளையில், ஏற்கனவே சிக்கன வகுப்பில் பயணிக்காது, வர்த்தக வகுப்பில் பயணித்த அரச பணியாளர்களிடம் இருந்து, மேலதிக கட்டண வித்தியாசத்தை திருப்பிச் செலுத்துவதற்கான திறைசேரி சுற்றறிக்கையும் விரைவில் வெளியிடப்படும், என்று அரச தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரச செலவினங்களைக் குறைக்க நான்கு மாதங்களுக்கு முன்னர், திறைசேரியினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement