அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு லொட்டஸ் வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சுக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.
அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான வெறிடங்களை நிரப்ப கோரியே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் போராட்டக்களத்திற்கு பொலிஸார், இராணுவத்தினர், கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று 4 விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
சம்பள பிரச்சினை, நியமனங்கள் வழங்கப்படாமை, ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் அரச ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கொழும்பில் வீதிக்கிறங்கிய அரச ஊழியர்கள் - களத்தில் குவிக்கப்பட்ட பொலிஸார், இராணுவத்தினர் அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு லொட்டஸ் வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சுக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது. அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான வெறிடங்களை நிரப்ப கோரியே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இந்நிலையில் போராட்டக்களத்திற்கு பொலிஸார், இராணுவத்தினர், கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று 4 விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.சம்பள பிரச்சினை, நியமனங்கள் வழங்கப்படாமை, ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், ஆர்ப்பாட்டத்தில் அரச ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.