• Dec 14 2024

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tamil nila / Dec 14th 2024, 7:14 pm
image

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விலை தொடர்பான அறிக்கையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை மற்றும் பிற தொடர்புடைய காரணிகளின் அடிப்படையில், ஆய்வு நடைபெற்று வருவதாக ஆணைக்குழு உறுதி செய்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி பொதுமக்களின் கருத்துக்கள் சேகரிக்கும் பணி ஆரம்பமாகி, 21 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விலை தொடர்பான அறிக்கையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.இந்த அறிக்கை மற்றும் பிற தொடர்புடைய காரணிகளின் அடிப்படையில், ஆய்வு நடைபெற்று வருவதாக ஆணைக்குழு உறுதி செய்துள்ளது.இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி பொதுமக்களின் கருத்துக்கள் சேகரிக்கும் பணி ஆரம்பமாகி, 21 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement