• May 03 2024

மரணதண்டனை விதியுங்கள் -இராஜாங்க அமைச்சர் ஆவேசம்!

Tamil nila / Dec 30th 2022, 12:46 pm
image

Advertisement

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பரவல் அதிகரித்துள்ளது என்பதை விஞ்ஞான ரீதியாக சுட்டிக்காட்ட வேண்டும். அதேபோல் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் ஆபத்தில் இருந்து காப்பாற்ற பிரதான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.


போதைப் பொருள் பாவனையில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்க பாடசாலைகளில் சோதனை நடத்தப்பட்டாலும் பாடசாலைக்குள் போதைப் பொருள் செல்லும் வழியை தடுக்க வேண்டும்.


மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் சுற்றிவளைப்பு தேடுதல்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். கைப்பற்றிய போதைப் பொருளுக்கு என்ன நடந்தது என்பதை வெளியிடும் பொறுப்பு காவல்துறை போதைப் பொருள் தடுப்பு பணியகத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.


பாடசாலை மாணவர்கள் தற்போது ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக்குள் போதைப் பொருள் வருவதை தடுக்க வேண்டுமாயின் வான் மற்றும் கடல் வழியாக வருவதை தடுக்க வேண்டும்.


கைப்பற்றப்படும், போதைப் பொருட்கள் பல வழிகளில் மீண்டும் வெளியில் செல்கிறது. அவை மீண்டும் நாடு முழுவதும் பரவி பிள்ளைகளின் கைகளுக்கு செல்கிறது எனவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை விதியுங்கள் -இராஜாங்க அமைச்சர் ஆவேசம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பரவல் அதிகரித்துள்ளது என்பதை விஞ்ஞான ரீதியாக சுட்டிக்காட்ட வேண்டும். அதேபோல் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் ஆபத்தில் இருந்து காப்பாற்ற பிரதான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.போதைப் பொருள் பாவனையில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்க பாடசாலைகளில் சோதனை நடத்தப்பட்டாலும் பாடசாலைக்குள் போதைப் பொருள் செல்லும் வழியை தடுக்க வேண்டும்.மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் சுற்றிவளைப்பு தேடுதல்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். கைப்பற்றிய போதைப் பொருளுக்கு என்ன நடந்தது என்பதை வெளியிடும் பொறுப்பு காவல்துறை போதைப் பொருள் தடுப்பு பணியகத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.பாடசாலை மாணவர்கள் தற்போது ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக்குள் போதைப் பொருள் வருவதை தடுக்க வேண்டுமாயின் வான் மற்றும் கடல் வழியாக வருவதை தடுக்க வேண்டும்.கைப்பற்றப்படும், போதைப் பொருட்கள் பல வழிகளில் மீண்டும் வெளியில் செல்கிறது. அவை மீண்டும் நாடு முழுவதும் பரவி பிள்ளைகளின் கைகளுக்கு செல்கிறது எனவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement