• May 04 2024

QR எரிபொருள் ஒதுக்கீடு உயர்வு – விலை குறைக்கப்படுமா..? வெளியான விசேட அறிவிப்பு samugammedia

Chithra / May 31st 2023, 8:58 am
image

Advertisement

தற்போது QR அமைப்பின் மூலம் வெளியிடப்படும் எரிபொருள் ஒதுக்கீடு நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு வாரத்திற்கு மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு 07 லீட்டர் எரிபொருள் கோட்டா 14 லீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு வழங்கப்படும் 8 லீட்டர் எரிபொருள் 14 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான 15 லீட்டர் எரிபொருள் கோட்டா 22 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கார் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு 30 லீட்டரில் இருந்து 40 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 60 லீட்டரிலிருந்தும், லொறிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 75 லீட்டரில் இருந்து 125 லீட்டராகவும் அதிகரிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, விலை திருத்தத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முறையும் எரிபொருளின் விலை குறைக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

QR எரிபொருள் ஒதுக்கீடு உயர்வு – விலை குறைக்கப்படுமா. வெளியான விசேட அறிவிப்பு samugammedia தற்போது QR அமைப்பின் மூலம் வெளியிடப்படும் எரிபொருள் ஒதுக்கீடு நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி ஒரு வாரத்திற்கு மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு 07 லீட்டர் எரிபொருள் கோட்டா 14 லீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு வழங்கப்படும் 8 லீட்டர் எரிபொருள் 14 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான 15 லீட்டர் எரிபொருள் கோட்டா 22 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கார் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு 30 லீட்டரில் இருந்து 40 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 60 லீட்டரிலிருந்தும், லொறிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 75 லீட்டரில் இருந்து 125 லீட்டராகவும் அதிகரிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதேவேளை, விலை திருத்தத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முறையும் எரிபொருளின் விலை குறைக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement