• Mar 28 2024

இரும்பு உற்பத்திகளுக்கு தரச்சான்றிதழ் கட்டாயம்..! - பல தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை samugammedia

Chithra / Jun 4th 2023, 12:23 pm
image

Advertisement

இரும்பு உற்பத்திகளுக்கு தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது. எஸ்.எல்.எஸ். (SLS) தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியாத இரும்பு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் பெறப்படாத நிறுவனங்கள் இரும்புக் கம்பிகளை உற்பத்தி செய்து வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில், குறித்த தரப்பினரை அழைத்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ளாத நிறுவனங்கள் தொடர்பில் தரச்சான்றிதழ் நிறுவனத்துக்கு அறிவித்து, அந்த நிறுவனங்களின் தொழிற்சாலை செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத்துறையுடன் தொடர்புடைய பொருட்கள் தொடர்பில் உரிய தரத்தைப் பேணவேண்டிய தேவையுள்ளது. 

இதன் காரணமாக இரும்பு உற்பத்திகளுக்கு தரச்சான்றிதழை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இரும்பு உற்பத்திகளுக்கு தரச்சான்றிதழ் கட்டாயம். - பல தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை samugammedia இரும்பு உற்பத்திகளுக்கு தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது. எஸ்.எல்.எஸ். (SLS) தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியாத இரும்பு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் பெறப்படாத நிறுவனங்கள் இரும்புக் கம்பிகளை உற்பத்தி செய்து வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில், குறித்த தரப்பினரை அழைத்து கலந்துரையாடப்பட்டுள்ளது. எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ளாத நிறுவனங்கள் தொடர்பில் தரச்சான்றிதழ் நிறுவனத்துக்கு அறிவித்து, அந்த நிறுவனங்களின் தொழிற்சாலை செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கட்டுமானத்துறையுடன் தொடர்புடைய பொருட்கள் தொடர்பில் உரிய தரத்தைப் பேணவேண்டிய தேவையுள்ளது. இதன் காரணமாக இரும்பு உற்பத்திகளுக்கு தரச்சான்றிதழை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement