• Jan 07 2025

அதிகாரிகளின் திடீர் சோதனை - அரிசியை அதிக விலைக்கு விற்ற பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Chithra / Dec 12th 2024, 8:40 am
image

 

கொழும்பு புறக்கோட்டை ஐந்தாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அரிசி மொத்த விற்பனையகங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

குறித்த சோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரிசி கையிருப்பு பதுக்கல் உள்ளிட்ட நெறிமுறைகளுக்கு புறம்பான முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சோதனையின் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த விற்பனையகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதான தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், காலாவதியான அரிசி விற்பனை, விலைக் குறியீடுகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட ஏனைய விதிமீறல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் அரிசியின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு நாட்டு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அமில ரத்நாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல மற்றும் அக்கரப்பத்தனை, ஹோல்புறுக் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களை கைது செய்வதற்காக குறித்த அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டம் முழுவதும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என தலைவர் அமில ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.


அதிகாரிகளின் திடீர் சோதனை - அரிசியை அதிக விலைக்கு விற்ற பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை  கொழும்பு புறக்கோட்டை ஐந்தாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அரிசி மொத்த விற்பனையகங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.குறித்த சோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.அரிசி கையிருப்பு பதுக்கல் உள்ளிட்ட நெறிமுறைகளுக்கு புறம்பான முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சோதனையின் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த விற்பனையகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதான தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், காலாவதியான அரிசி விற்பனை, விலைக் குறியீடுகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட ஏனைய விதிமீறல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் அரிசியின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு நாட்டு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அமில ரத்நாயக்க தெரிவித்தார்.நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல மற்றும் அக்கரப்பத்தனை, ஹோல்புறுக் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களை கைது செய்வதற்காக குறித்த அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.நுவரெலியா மாவட்டம் முழுவதும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என தலைவர் அமில ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement