அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல கிராமங்களுக்குள் காட்டுப்பன்றி கூட்டங்கள் படையெடுப்பதால் விவசாயிகள் உட்பட அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த துயரத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேன, கலவெல்தெனிய, அபர்டீன், லக்சபான, கிரிவான் எலிய, ஹங்கராபிட்டிய, கொட்டெல்லென மற்றும் மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்கம்மற்றும் பொகவந்தலாவ சாமி மலை ஆகிய பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு தினமும் வரும் இந்த காட்டுப்பன்றி கூட்டங்கள், குறுகிய காலத்தில் தங்கள் பயிர்களை அழிப்பதாக அந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கூட்டத்தில் கிட்டத்தட்ட 50 பன்றிகள், குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் இருப்பதாகவும், பன்றிகள், குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு மற்றும் பானங்களை எடுத்து கொள்வதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சில நேரங்களில் மக்கள் சாப்பிடும் இடங்களில் புகுந்து குரங்குகள், அவர்களின் கைகளில் இருந்து உணவைப் பறிக்கப்படுவதாகவும், இதுபோன்ற சமயங்களில் அவை கடிக்க குதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குரங்குகளை விரட்ட முயற்சிக்கும் போது கடிக்க பழகி விட்டதாகவும், பலர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்ற பல நிகழ்வுகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பயிர்கள் அழிக்கப்படுவதால் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறும் விவசாயிகள், குரங்கு, பன்றிகளால் ஏற்படும் அழிவு காரணமாக விவசாயத்தை நிறுத்திவிட்டதாகக் தெரிவித்துள்ளனர்.
இந்த மிருகங்களால் ரேபிஸ் தொற்று நோய் ஏற்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு பொறுப்பானவர்கள் உறுதியான தீர்வை அவசரமாக வழங்குமாறு வலியுறுத்துகின்றனர்.
படையெடுக்கும் காட்டுப்பன்றி கூட்டங்கள்; கடும் நெருக்கடியில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல கிராமங்களுக்குள் காட்டுப்பன்றி கூட்டங்கள் படையெடுப்பதால் விவசாயிகள் உட்பட அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த துயரத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேன, கலவெல்தெனிய, அபர்டீன், லக்சபான, கிரிவான் எலிய, ஹங்கராபிட்டிய, கொட்டெல்லென மற்றும் மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்கம்மற்றும் பொகவந்தலாவ சாமி மலை ஆகிய பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு தினமும் வரும் இந்த காட்டுப்பன்றி கூட்டங்கள், குறுகிய காலத்தில் தங்கள் பயிர்களை அழிப்பதாக அந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கூட்டத்தில் கிட்டத்தட்ட 50 பன்றிகள், குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் இருப்பதாகவும், பன்றிகள், குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு மற்றும் பானங்களை எடுத்து கொள்வதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் மக்கள் சாப்பிடும் இடங்களில் புகுந்து குரங்குகள், அவர்களின் கைகளில் இருந்து உணவைப் பறிக்கப்படுவதாகவும், இதுபோன்ற சமயங்களில் அவை கடிக்க குதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குரங்குகளை விரட்ட முயற்சிக்கும் போது கடிக்க பழகி விட்டதாகவும், பலர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்ற பல நிகழ்வுகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் பயிர்கள் அழிக்கப்படுவதால் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறும் விவசாயிகள், குரங்கு, பன்றிகளால் ஏற்படும் அழிவு காரணமாக விவசாயத்தை நிறுத்திவிட்டதாகக் தெரிவித்துள்ளனர். இந்த மிருகங்களால் ரேபிஸ் தொற்று நோய் ஏற்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு பொறுப்பானவர்கள் உறுதியான தீர்வை அவசரமாக வழங்குமாறு வலியுறுத்துகின்றனர்.