• Mar 13 2025

கூளாவடி பிரதேசத்தில் உணவகங்கள் திடீர் சோதனை; 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Chithra / Mar 12th 2025, 3:10 pm
image


மட்டக்களப்பு - கூளாவடி பிரதேசத்தில் உள்ள உணவுக் கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இரவு முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதன்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு மற்றும் மனித பாவனைக்கு உதவாத  உணவுகளை விற்பனையில் ஈடுபட்ட 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.

மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர. முரளீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய கோட்டமுனை மற்றும் இருதயபுரம் பொதுசுகாதார பரிசோதகர்களான எஸ்.கஜானந்தன், என்.கருணாகரன், ரி.மிதுன்ராஜ். யே. யசேதரன், ரி.பகீரதன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்கள் கடைகளை முற்றுகையிட்டனர்.


கூளாவடி பிரதேசத்தில் உணவகங்கள் திடீர் சோதனை; 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் மட்டக்களப்பு - கூளாவடி பிரதேசத்தில் உள்ள உணவுக் கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இரவு முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு மற்றும் மனித பாவனைக்கு உதவாத  உணவுகளை விற்பனையில் ஈடுபட்ட 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர. முரளீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய கோட்டமுனை மற்றும் இருதயபுரம் பொதுசுகாதார பரிசோதகர்களான எஸ்.கஜானந்தன், என்.கருணாகரன், ரி.மிதுன்ராஜ். யே. யசேதரன், ரி.பகீரதன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்கள் கடைகளை முற்றுகையிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement