• Mar 13 2026

நள்ளிரவு முதல் ரயில் இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

Chithra / Feb 17th 2026, 6:35 pm
image

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர். 

ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டம் ஒன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இவ்வாறு சேவையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். 

இது தொடர்பாகப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. 

இதனையடுத்து, இன்று மாலை கூடிய லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு, இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் ரயில் இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர். ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டம் ஒன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இவ்வாறு சேவையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாகப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனையடுத்து, இன்று மாலை கூடிய லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு, இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement