வடக்கு வங்காள விரிகுடாவில் நேற்றைய தினம் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று இந்தியாவின் புவனேஸ்வர் நகரிலிருந்து கிழக்காக 178 கி.மீ. தொலைவாக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
இது வடக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை இரவு அல்லது நாளை மறுதினம் காலை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திற்கும் பங்களாதேஷிற்குமிடையில் (சியாமாநகருக்கு அண்மித்ததாக ) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் எத்தகைய பாதிப்பும் கிடையாது. ஆயினும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும்.
அதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது
.
மேலும் தற்போது இலங்கையின் காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் தென்மேற்குப் பருவ மழை எதிர்வரும் யூன் மாதம் 04 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது என மேலும் குறிப்பிட்டுள்ளார்
வடகிழக்கில் சனி வரை மழை காற்றின் வேகம் அதிகரிக்கும் - தென்பகுதியில் யூன் 4 வரை கனமழை தொடரும் வாய்ப்பு வடக்கு வங்காள விரிகுடாவில் நேற்றைய தினம் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று இந்தியாவின் புவனேஸ்வர் நகரிலிருந்து கிழக்காக 178 கி.மீ. தொலைவாக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், இது வடக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை இரவு அல்லது நாளை மறுதினம் காலை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திற்கும் பங்களாதேஷிற்குமிடையில் (சியாமாநகருக்கு அண்மித்ததாக ) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் எத்தகைய பாதிப்பும் கிடையாது. ஆயினும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும். அதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. மேலும் தற்போது இலங்கையின் காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் தென்மேற்குப் பருவ மழை எதிர்வரும் யூன் மாதம் 04 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது என மேலும் குறிப்பிட்டுள்ளார்