• Nov 20 2024

வவுனியா மாவட்டத்தில் பதிவான மழை வீழ்ச்சி தொடர்பில் அறிவிப்பு

Chithra / Nov 20th 2024, 11:41 am
image


வவுனியா மாவட்டத்தில் 2024 ஜனவரி தொடக்கம் நவம்பர் 19 வரை 83 வீதமான மழை வீழ்ச்சி  பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்.

ஊடகவியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 1200 தொடக்கம் 1400 மில்லி மீற்றர் அளவிலேயே மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது. 

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில்   ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 994.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.  


இந்நிலையில் வருகின்ற 40 நாட்களிற்குள் 300 மில்லி மீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகும்.

இனிவரும் காலப்பகுதியில் பெய்யும் மழை சாதாரண மழையாகவே காணப்படும். 

நவம்பர் இறுதி, டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டாலும் சராசரி மழைவீழ்ச்சியாகவே காணப்படும் எனவும் மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் பதிவான மழை வீழ்ச்சி தொடர்பில் அறிவிப்பு வவுனியா மாவட்டத்தில் 2024 ஜனவரி தொடக்கம் நவம்பர் 19 வரை 83 வீதமான மழை வீழ்ச்சி  பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்.ஊடகவியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 1200 தொடக்கம் 1400 மில்லி மீற்றர் அளவிலேயே மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில்   ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 994.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.  இந்நிலையில் வருகின்ற 40 நாட்களிற்குள் 300 மில்லி மீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகும்.இனிவரும் காலப்பகுதியில் பெய்யும் மழை சாதாரண மழையாகவே காணப்படும். நவம்பர் இறுதி, டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டாலும் சராசரி மழைவீழ்ச்சியாகவே காணப்படும் எனவும் மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement