• Apr 02 2025

எதிர்க்கட்சித் தலைவராகும் ரணில்? சஜித்தின் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! அம்பலமான திட்டம்

Chithra / Nov 20th 2024, 11:34 am
image

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்கப்படவுள்ளதாக  குறிப்பிடப்படுகின்றது.

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க சித்தாந்த சவாலை முன்வைக்க முடியாது என அந்த எம்.பி.க்கள் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அந்த நிலைமையின் அடிப்படையில் அவர்களில் ஒரு குழு ரணில் விக்ரமசிங்கவின் எதிர்க்கட்சித் தலைமையின் கீழ் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலுக்கு நியமிக்கப்பட்ட எம்.பி ஒருவர் பதவி விலகி, அந்த வெற்றிடத்திற்காக நாடாளுமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவராகும் ரணில் சஜித்தின் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் அம்பலமான திட்டம்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்கப்படவுள்ளதாக  குறிப்பிடப்படுகின்றது.சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க சித்தாந்த சவாலை முன்வைக்க முடியாது என அந்த எம்.பி.க்கள் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.அந்த நிலைமையின் அடிப்படையில் அவர்களில் ஒரு குழு ரணில் விக்ரமசிங்கவின் எதிர்க்கட்சித் தலைமையின் கீழ் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலுக்கு நியமிக்கப்பட்ட எம்.பி ஒருவர் பதவி விலகி, அந்த வெற்றிடத்திற்காக நாடாளுமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement