• May 01 2024

மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Nov 11th 2023, 10:30 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சபரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று இரவு வேளைகளில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், களுகங்கை, நில்வளா கங்கை, தெதுறு ஓயா, மற்றும் அத்தனுகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, இரத்தினபுரி, கொழும்பு, கண்டி, கேகாலை, மாத்தறை குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை samugammedia நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், மத்திய, சபரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று இரவு வேளைகளில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.அத்துடன், களுகங்கை, நில்வளா கங்கை, தெதுறு ஓயா, மற்றும் அத்தனுகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீர்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பதுளை, இரத்தினபுரி, கொழும்பு, கண்டி, கேகாலை, மாத்தறை குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement