• Mar 26 2025

இந்திய துணைத் தூதரகத்தின் எற்பாட்டில் ரம்ஸான் அன்பளிப்பு பொருட்களை கையளிக்கும் நிகழ்வு

Chithra / Mar 25th 2025, 3:52 pm
image

 

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் எற்பாட்டில் இஸ்லாமிய ரம்ஸான் பெருநாளினை முன்னிட்டு இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் ரம்ஸான் அன்பளிப்பு பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ். திருவள்ளுவர் கலாச்சார பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி கலந்துகொண்டு பொருட்களை வழங்கிவைத்தார்.

இதில் யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட 220 குடும்பங்களுக்கு இன்று இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், யாழ் வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 குடும்பங்களுக்கு நாளை இந்த ரம்ஸான் அன்பளிப்பு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன

இதில் யாழ் இந்திய தூதரக அதிகாரி ரம்யா, யாழ் - கிளிநொச்சி மக்கள் பணிமனையின் தலைவர் மெளலவி பி.சுபியான் உள்ளிட்ட தூதரக குழுவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


இந்திய துணைத் தூதரகத்தின் எற்பாட்டில் ரம்ஸான் அன்பளிப்பு பொருட்களை கையளிக்கும் நிகழ்வு  யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் எற்பாட்டில் இஸ்லாமிய ரம்ஸான் பெருநாளினை முன்னிட்டு இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் ரம்ஸான் அன்பளிப்பு பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ். திருவள்ளுவர் கலாச்சார பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி கலந்துகொண்டு பொருட்களை வழங்கிவைத்தார்.இதில் யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட 220 குடும்பங்களுக்கு இன்று இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், யாழ் வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 குடும்பங்களுக்கு நாளை இந்த ரம்ஸான் அன்பளிப்பு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளனஇதில் யாழ் இந்திய தூதரக அதிகாரி ரம்யா, யாழ் - கிளிநொச்சி மக்கள் பணிமனையின் தலைவர் மெளலவி பி.சுபியான் உள்ளிட்ட தூதரக குழுவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement