• Jan 16 2025

மின்கட்டணக் குறைப்பிற்கு பச்சைக்கொடி காட்டியவர் ரணிலே! சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதி சபாநாயகர்

Chithra / Jan 13th 2025, 11:55 am
image

 

தேர்தல் வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தி வழங்கிய நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதியும், அரசாங்கமும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மின்கட்டணத்தை குறைப்பதற்கான சாதகமான சூழலையே ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தினார்.

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. அரிசி உற்பத்தியாளர்களிடம் அரசாங்கம் முழுமையாக அடிபணிந்துள்ளது.

மின்கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதியளிக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். பொய்யுரைப்பதையே இந்த அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது.

நாட்டின் துரதிஷ்டத்தால் தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள்.

சொல்வது இலகு, செயற்படுவது கடினம் என்பதை தற்போதைய அரசாங்கம் உண்மை என்று நிரூபித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் போலியான வாக்குறுதி மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

தேர்தல் வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தி வழங்கிய நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது. பொருளாதார மீட்சிக்கு அரசாங்கத்திடம் சிறந்த திட்டங்கள் ஏதும் கிடையாது.  என தெரிவித்தார்.

மின்கட்டணக் குறைப்பிற்கு பச்சைக்கொடி காட்டியவர் ரணிலே சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதி சபாநாயகர்  தேர்தல் வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தி வழங்கிய நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதியும், அரசாங்கமும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.மின்கட்டணத்தை குறைப்பதற்கான சாதகமான சூழலையே ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தினார்.சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. அரிசி உற்பத்தியாளர்களிடம் அரசாங்கம் முழுமையாக அடிபணிந்துள்ளது.மின்கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதியளிக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். பொய்யுரைப்பதையே இந்த அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது.நாட்டின் துரதிஷ்டத்தால் தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள்.சொல்வது இலகு, செயற்படுவது கடினம் என்பதை தற்போதைய அரசாங்கம் உண்மை என்று நிரூபித்துள்ளது.தேசிய மக்கள் சக்தியின் போலியான வாக்குறுதி மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.தேர்தல் வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தி வழங்கிய நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது. பொருளாதார மீட்சிக்கு அரசாங்கத்திடம் சிறந்த திட்டங்கள் ஏதும் கிடையாது.  என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement