ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட அரசியல் கலந்துரையாடல் விரைவில் இடம்பெறவுள்ளதாக முன்னாள் ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கூட்டுக் கூட்டணியைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக முன்னாள் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கூட்டணியின் பெயர், போட்டியிடும் சின்னம், வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பல அரசியல் விவகாரங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
அதன்பின்னர் இரு தலைவர்களும் நேருக்கு நேர் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், தலைவர் மட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானதாக இருக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கடந்த சில நாட்களாக தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இரண்டு சுற்றுகள் நடைபெற்றதாகவும், அவை தலைமைத்துவ சபையினால் தொடரப்பட்டால் இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தையும், ஐக்கிய மக்கள் கட்சியின் தொலைபேசிச் சின்னத்தையும் தவிர்த்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஒரு பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே பலரது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்ததாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
வேட்பாளர்களை தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும் எனவும், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த கட்சிகள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறும்.
இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி 40 இலட்சம் வாக்குகளைப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய கூட்டணி தொடர்பில் ரணில்- சஜித் விரைவில் சந்திப்பு. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட அரசியல் கலந்துரையாடல் விரைவில் இடம்பெறவுள்ளதாக முன்னாள் ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கூட்டுக் கூட்டணியைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக முன்னாள் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, கூட்டணியின் பெயர், போட்டியிடும் சின்னம், வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பல அரசியல் விவகாரங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.அதன்பின்னர் இரு தலைவர்களும் நேருக்கு நேர் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், தலைவர் மட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானதாக இருக்கும்.ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கடந்த சில நாட்களாக தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இரண்டு சுற்றுகள் நடைபெற்றதாகவும், அவை தலைமைத்துவ சபையினால் தொடரப்பட்டால் இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும்.ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தையும், ஐக்கிய மக்கள் கட்சியின் தொலைபேசிச் சின்னத்தையும் தவிர்த்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஒரு பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே பலரது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்ததாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.வேட்பாளர்களை தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும் எனவும், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த கட்சிகள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறும்.இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி 40 இலட்சம் வாக்குகளைப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.