• Nov 28 2024

பிரதமராகும் ரணில் விக்கிரமசிங்க..! முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆரூடம்..!

Sharmi / Oct 5th 2024, 10:13 am
image

அநுர குமாரவுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் ஊடாக ஆட்சி அமைந்தால் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகலாம் என முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான  ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து   ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார். 

குறித்த நியமனங்கள் நேற்றையதினம்(04)  உத்தியோகபூர்வமாக கொழும்பு_07 ல் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தூக்கி எரிந்து விட்டு ரணிலுடன் கைகோர்த்துள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தினையும் இதன் போது ரணிலிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவும் சிலிண்டர் சின்னத்திலும் ரணில் கூட்டணியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

சிறந்ததொரு தலைவனுக்கான உதாரணமாக ரணில் விக்ரமசிங்க விளங்குகிறார்.

முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்தவர் இவரே..

ரிசாட் பதியுதீன் சிறையில் அடைக்கப்பட்ட போதும் கூட பாராளுமன்றில் குரல் கொடுத்தவர்.

எனவே தான் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் ரிசாட்  , ஹக்கீம் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்.

அநுர குமாரவுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் ஊடாக ஆட்சி அமைந்தால் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகலாம் என்றார்.


பிரதமராகும் ரணில் விக்கிரமசிங்க. முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆரூடம். அநுர குமாரவுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் ஊடாக ஆட்சி அமைந்தால் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகலாம் என முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான  ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து   ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனங்கள் நேற்றையதினம்(04)  உத்தியோகபூர்வமாக கொழும்பு_07 ல் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தூக்கி எரிந்து விட்டு ரணிலுடன் கைகோர்த்துள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தினையும் இதன் போது ரணிலிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவும் சிலிண்டர் சின்னத்திலும் ரணில் கூட்டணியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன் பின் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். சிறந்ததொரு தலைவனுக்கான உதாரணமாக ரணில் விக்ரமசிங்க விளங்குகிறார். முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்தவர் இவரே. ரிசாட் பதியுதீன் சிறையில் அடைக்கப்பட்ட போதும் கூட பாராளுமன்றில் குரல் கொடுத்தவர். எனவே தான் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் ரிசாட்  , ஹக்கீம் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர். அநுர குமாரவுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் ஊடாக ஆட்சி அமைந்தால் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகலாம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement