• Nov 24 2024

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும்-கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு..!

Sharmi / Sep 10th 2024, 9:32 pm
image

நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்றையதினம்(10) இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் தவறவிடும் பட்சத்தில்  அடுத்த ஐந்து வருடங்கள் அதனை நிவர்த்தி செய்வதற்காக காத்திருக்க வேண்டும். 

இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.   உண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும்.

அப்போதுதான் கடந்த இரு வருட வளர்ச்சியை தொடர்ச்சியாக கொண்டு செல்ல முடியும். இன்றேல் அதளபாதாளத்தில் நாடு வீழும்.

அதனை உணர்ந்து ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய வேண்டும். எங்களை நம்பி உங்கள் வாக்குகளை அளியுங்கள். கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம்.

நமது அரசியல் தலைமைகள் தென்னிலங்கை  ஆட்சியாளர்களுடன் உறவை வைத்துக் கொண்டு தமது சுயலாபங்களை பெற்ற பின்னர் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்று மக்களை பலர் ஏமாற்றுவார்கள் நாம் அவ்வாறு  ஒருபோதும் சொல்ல விரும்பவில்லை.

நாம் சொல்வதைத் தான் செய்வோம். ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார்.


ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும்-கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு. நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.கிளிநொச்சியில் இன்றையதினம்(10) இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் தவறவிடும் பட்சத்தில்  அடுத்த ஐந்து வருடங்கள் அதனை நிவர்த்தி செய்வதற்காக காத்திருக்க வேண்டும்.  இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.   உண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரு வருட வளர்ச்சியை தொடர்ச்சியாக கொண்டு செல்ல முடியும். இன்றேல் அதளபாதாளத்தில் நாடு வீழும்.அதனை உணர்ந்து ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய வேண்டும். எங்களை நம்பி உங்கள் வாக்குகளை அளியுங்கள். கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம்.நமது அரசியல் தலைமைகள் தென்னிலங்கை  ஆட்சியாளர்களுடன் உறவை வைத்துக் கொண்டு தமது சுயலாபங்களை பெற்ற பின்னர் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்று மக்களை பலர் ஏமாற்றுவார்கள் நாம் அவ்வாறு  ஒருபோதும் சொல்ல விரும்பவில்லை. நாம் சொல்வதைத் தான் செய்வோம். ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement