• Nov 19 2024

மகிந்தவை எச்சரிக்கும் ரணிலின் புதிய ஆதரவாளர்கள் - மொட்டு வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்..!

Chithra / Jul 31st 2024, 9:32 am
image


  

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  ஆதரவளித்துள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம்  ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

மேலும், ராஜபக்ச தனது நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். ரணிலை ஆதரிக்க வேண்டும். அல்லது அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அதேவேளை, நேற்று எடுத்த முடிவில் மகிந்த ராஜபக்சவின் கட்சி உறுதியாகயிருந்தால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கான ஆதரவு குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமன்றி, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தவறினால் அது பொதுஜன பெரமுனவின் அழிவிற்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 


இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அது மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளது.

கட்சியிலிருந்து விலகிச் செல்லும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்குப் பதிலாக புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.


மகிந்தவை எச்சரிக்கும் ரணிலின் புதிய ஆதரவாளர்கள் - மொட்டு வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்.   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  ஆதரவளித்துள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம்  ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.மேலும், ராஜபக்ச தனது நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். ரணிலை ஆதரிக்க வேண்டும். அல்லது அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை, நேற்று எடுத்த முடிவில் மகிந்த ராஜபக்சவின் கட்சி உறுதியாகயிருந்தால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கான ஆதரவு குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.அது மாத்திரமன்றி, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தவறினால் அது பொதுஜன பெரமுனவின் அழிவிற்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அது மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளது.கட்சியிலிருந்து விலகிச் செல்லும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்குப் பதிலாக புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement