• Oct 09 2024

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வெற்றி தற்போது உறுதி- அலி சப்ரி நம்பிக்கை..!

Sharmi / Sep 14th 2024, 3:16 pm
image

Advertisement

இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அநுரகுமார திஸாநாயக்கவும் மாத்திரமே பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். வேறு எவருக்கு வாக்களித்தாலும் அது அநுரகுமாரவுக்குச் சாதகமாக அமையும். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை நிராகரித்து மற்றைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்றையதினம்(13) பிற்பகல் 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.

"நாடு இன்று நல்ல நிலமையில் இருக்கின்றது. இந்தப் பயணத்தை மாற்ற வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

கிறீஸிலும் இதேபோன்று பொதுவுடமை மாற்றம் வேண்டும் என்று சிலர் வந்தனர்.

அங்கிருந்து சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்பி அனுப்பிவிட்டனர். அதன்பின்னர், அந்த நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டனர். அவ்வாறான நிலைக்கு நாமும் செல்ல வேண்டுமா?

இலங்கையில் இன்று வடக்கு - கிழக்கு தமிழ் மக்களும், மலையகத் தமிழ் மக்களும், கொழும்பு மக்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனேயே உள்ளனர்.

எனவே, ஜனாதிபதி ரணிலின் வெற்றி தற்போது உறுதியாகியுள்ளது." - என்றார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வெற்றி தற்போது உறுதி- அலி சப்ரி நம்பிக்கை. இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அநுரகுமார திஸாநாயக்கவும் மாத்திரமே பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். வேறு எவருக்கு வாக்களித்தாலும் அது அநுரகுமாரவுக்குச் சாதகமாக அமையும். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை நிராகரித்து மற்றைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்றையதினம்(13) பிற்பகல் 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்."நாடு இன்று நல்ல நிலமையில் இருக்கின்றது. இந்தப் பயணத்தை மாற்ற வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.கிறீஸிலும் இதேபோன்று பொதுவுடமை மாற்றம் வேண்டும் என்று சிலர் வந்தனர். அங்கிருந்து சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்பி அனுப்பிவிட்டனர். அதன்பின்னர், அந்த நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டனர். அவ்வாறான நிலைக்கு நாமும் செல்ல வேண்டுமாஇலங்கையில் இன்று வடக்கு - கிழக்கு தமிழ் மக்களும், மலையகத் தமிழ் மக்களும், கொழும்பு மக்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனேயே உள்ளனர். எனவே, ஜனாதிபதி ரணிலின் வெற்றி தற்போது உறுதியாகியுள்ளது." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement