• Feb 05 2025

பிரமிட் வடிவில் அரியவகை நீலநிற மாணிக்கம் - இலங்கையில் கண்டுபிடிப்பு

Chithra / Dec 12th 2024, 2:11 pm
image


நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

எனினும் இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

17.42 கெரட் நிறை கொண்ட குறித்த மாணிக்கக்கல் பதுளை, பசறை பகுதியில் உள்ள சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாணிக்கக்கல் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழைக் கொண்டுள்ளது.

உலகச் சந்தையுடன் இணைவதற்கும் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கும் இலங்கைக்கு இந்த மாணிக்கக்கல் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இதன் உரிமையாளர் சுமார் 20 வருடங்களாக மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரமிட் வடிவில் அரியவகை நீலநிற மாணிக்கம் - இலங்கையில் கண்டுபிடிப்பு நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.எனினும் இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.17.42 கெரட் நிறை கொண்ட குறித்த மாணிக்கக்கல் பதுளை, பசறை பகுதியில் உள்ள சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த மாணிக்கக்கல் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழைக் கொண்டுள்ளது.உலகச் சந்தையுடன் இணைவதற்கும் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கும் இலங்கைக்கு இந்த மாணிக்கக்கல் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.இதன் உரிமையாளர் சுமார் 20 வருடங்களாக மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement