• Jun 02 2024

ரயில் நிலைய உணவகத்தின் உணவுகள் மீது எலி - ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்த மக்கள்! samugammedia

Chithra / Aug 15th 2023, 9:14 am
image

Advertisement

அநுராதபுரம் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ரயில்வே அதிகாரிகள், உணவகத்திற்கு சீல் வைத்ததையடுத்து, உணவகத்தை நடத்தி வந்தவர், சீலை உடைத்து, உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.


பின்னர் சுகாதார அதிகாரிகள் உணவகத்திற்கு மீண்டும் சீல் வைத்ததுடன், மறைத்து வைக்கப்பட்ட உணவை எடுத்து வருமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டனர்.

இந்த உணவகத்தை நடத்தியவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அனுராதபுரம் புகையிரத நிலையம் மட்டுமன்றி கொழும்பு கோட்டை, கண்டி, மஹவ மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களிலும் இதே நபர் உணவகங்களை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

ரயில் நிலைய உணவகத்தின் உணவுகள் மீது எலி - ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்த மக்கள் samugammedia அநுராதபுரம் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அதற்கமைய, ரயில்வே அதிகாரிகள், உணவகத்திற்கு சீல் வைத்ததையடுத்து, உணவகத்தை நடத்தி வந்தவர், சீலை உடைத்து, உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.பின்னர் சுகாதார அதிகாரிகள் உணவகத்திற்கு மீண்டும் சீல் வைத்ததுடன், மறைத்து வைக்கப்பட்ட உணவை எடுத்து வருமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டனர்.இந்த உணவகத்தை நடத்தியவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அனுராதபுரம் புகையிரத நிலையம் மட்டுமன்றி கொழும்பு கோட்டை, கண்டி, மஹவ மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களிலும் இதே நபர் உணவகங்களை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement