• Apr 02 2025

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை மறுதினம் தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும்- மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

Tamil nila / Jun 2nd 2024, 6:59 pm
image

வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374  பட்டதாரி ஆசிரியர்களும் நாளை மறுதினம் தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர்கள் நாளைய  தினம் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், நாளைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே நாளை மறுதினம் பாடசாலை தினத்தில்  புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை மறுதினம் தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும்- மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374  பட்டதாரி ஆசிரியர்களும் நாளை மறுதினம் தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.புதிய ஆசிரியர்கள் நாளைய  தினம் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், நாளைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.ஆகவே நாளை மறுதினம் பாடசாலை தினத்தில்  புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement