• Oct 18 2024

இலங்கையை உலுக்கிய ரத்துபஸ்வல விவகாரம்- இராணுவ வீரர்கள் விடுதலை..!!

Tamil nila / May 17th 2024, 7:21 pm
image

Advertisement

2013 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பேர் கொல்லப்பட்ட ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை கம்பஹா மேல் நீதிமன்ற விசாரணை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

இராணுவ பிரிகேடியர் ஒருவர் உட்பட 4 இராணுவத்தினரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்று 11 வருடங்களின் பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகளான நிமல் ரணவீர, நிஷாந்த ஹப்புஆராச்சி மற்றும் சஹான் மாபா ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட் பார், ஒரு இராணுவ அதிகாரி மற்றும் மூன்று இராணுவத்தினரை வழக்கில் இருந்து விடுவித்தது.

பிரதிவாதிகள் அனைவரும் குறித்த சந்தர்ப்பத்தில் சட்டவிரோதமாக அங்கு ஒன்று கூடியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமையை அடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் ஆயம் அறிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி கம்பஹா இரத்துபஸ்வல வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டதுடன் 45 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இராணுவ பிரிகேடியர் ஒருவர் உட்பட 4 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தனர்

இலங்கையை உலுக்கிய ரத்துபஸ்வல விவகாரம்- இராணுவ வீரர்கள் விடுதலை. 2013 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பேர் கொல்லப்பட்ட ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை கம்பஹா மேல் நீதிமன்ற விசாரணை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.இராணுவ பிரிகேடியர் ஒருவர் உட்பட 4 இராணுவத்தினரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் இடம்பெற்று 11 வருடங்களின் பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகளான நிமல் ரணவீர, நிஷாந்த ஹப்புஆராச்சி மற்றும் சஹான் மாபா ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட் பார், ஒரு இராணுவ அதிகாரி மற்றும் மூன்று இராணுவத்தினரை வழக்கில் இருந்து விடுவித்தது.பிரதிவாதிகள் அனைவரும் குறித்த சந்தர்ப்பத்தில் சட்டவிரோதமாக அங்கு ஒன்று கூடியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமையை அடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் ஆயம் அறிவித்துள்ளது.2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி கம்பஹா இரத்துபஸ்வல வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டதுடன் 45 பேர் காயமடைந்தனர்.இது தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து இராணுவ பிரிகேடியர் ஒருவர் உட்பட 4 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தனர்

Advertisement

Advertisement

Advertisement