• Nov 21 2024

தேசியப்பட்டியலுக்கு ரவி கருணாநாயக்க நியமனம் - வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாது! - தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

Chithra / Nov 20th 2024, 12:06 pm
image


புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டமை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட விடயம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் நியமனத்திற்கான பெயரை உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளமையால் வர்த்தமானியில் வெளியிடும் தனது கடமையை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ  பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் கையளித்ததும், ஆணைக்குழு அதனை உத்தியோகபூர்வ நடவடிக்கையாகவே கருதும் என அவர் தெரிவித்துள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய ஜனநாயக முன்னணி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவை கூட்டுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் லசந்த குணவர்தன இந்த கோரிக்கையை கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடிதம் மூலமாக கோரியுள்ளார்.

கட்சியின் செயலாளர் ரவி கருணாநாயக்க இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முறையான நடைமுறை மற்றும் கட்சியின் அங்கீகாரம் இன்றி பெற்றுள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கட்சியின் அரசியலமைப்பை கடுமையாக மீறும் செயலாகும் என்பதால், கட்சியின் செயற்குழுவை விரைவில் கூட்டி இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவெடுக்க வேண்டும் என்றும் லசந்த குணவர்தன கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


தேசியப்பட்டியலுக்கு ரவி கருணாநாயக்க நியமனம் - வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாது - தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டமை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட விடயம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தேசியப்பட்டியல் நியமனத்திற்கான பெயரை உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளமையால் வர்த்தமானியில் வெளியிடும் தனது கடமையை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.உத்தியோகபூர்வ  பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் கையளித்ததும், ஆணைக்குழு அதனை உத்தியோகபூர்வ நடவடிக்கையாகவே கருதும் என அவர் தெரிவித்துள்ளார்.எந்த சூழ்நிலையிலும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் புதிய ஜனநாயக முன்னணி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவை கூட்டுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் லசந்த குணவர்தன இந்த கோரிக்கையை கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடிதம் மூலமாக கோரியுள்ளார்.கட்சியின் செயலாளர் ரவி கருணாநாயக்க இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முறையான நடைமுறை மற்றும் கட்சியின் அங்கீகாரம் இன்றி பெற்றுள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இச்சம்பவம் கட்சியின் அரசியலமைப்பை கடுமையாக மீறும் செயலாகும் என்பதால், கட்சியின் செயற்குழுவை விரைவில் கூட்டி இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவெடுக்க வேண்டும் என்றும் லசந்த குணவர்தன கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement