• May 03 2024

இலங்கை- இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தையில் நடுநிலைமை வகிக்கத் தயார்- கச்சதீவில் அமைச்சர் டக்லஸ் உறுதி!SamugamMedia

Sharmi / Mar 3rd 2023, 4:35 pm
image

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு அந்தோனியர் ஆலய ஆலய உற்சவம் இன்று ஆரம்பமாகிறது.

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்தும் பல்வேறு பட்ட மக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையிலிருந்தும் இன்று காலை ஏராளமானவர்கள் கச்சதீவுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை மறுபுறம் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் இருநாட்டு மீனவர்களும் கச்சதீவில் கலந்துரையாடவுள்ளனர்.

இதன் ஒரு அங்கமாக சற்றுமுன் இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

இதேவேளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய தினம் காலங்காலமாக நிலவி வரும் இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க முனைவதற்கான கலந்துரையாடலில் இருதரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.

அண்மையிலும் ஊர்காவற்துறையில் 4 திருகோணமலையில் 2 படகுகள் விடுவிக்கப்பட்டது. ஏற்கனவே 2018 க்கு முதல் இலங்கைக் கடற்படையால் பிடிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட படகுகள் வழங்கப்பட்டன.

 நீண்ட காலமாக இங்கு இந்திய மீனவர்களின் பிடிபட்ட படகுகள் இங்கு இடத்தை ஆக்கிரமிப்பதாலும் டெங்கு போன்ற நோய் பரவுவதாலும் ; எரிபொருள் கடலில் கலப்பதாலும் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக இந்திய தரப்பிடம் எடுத்து கூறியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை

2013 முதல்  2022 வரை இ்ந்தியாவின் 42 படகுகள் கைப்பற்றப்பட்டன. 37 படகுகளின் ஒரு சில படகுகள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது. ஏனைய ஒரு சில படகுகள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையதாக காணப்படுகிறது.

அண்மையில் ஜெயசங்கர் மற்றும் இராஜாங்க அமைச்சர் முருகன் .மற்றும் விஜேபியை சேர்ந்த அண்ணாமலை போன்றோர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். அவர்கள் இரு நாட்டுக்கிடையிலும் நல்லெண்ண சமிக்ஞையாக 10 படகுகளை விடுவிக்குமாறு கோரினார்.  அதன் போது எமது பக்கத்திலிருந்து குறைந்தது 6 மாத காலத்திற்காவது இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்துமாறு நான் கோரிக்கை விடுத்தேன் எனவும் தெரிவித்தார்.

2020 ம் ஆண்டு பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் டெல்லி சென்ற போது பிரதமர் மோடி மற்றும் ஜெய்சங்கரிடம் அறிக்கையொன்றை வழங்கினேன். இரு தரப்பு கடற்தொழில் பிரதிநிதிகள் மற்றும் துறைசாரோரை உள்ளடக்கி குழுவொன்றை அமைத்து வளங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான தீர்மனமொன்றை முன்வத்தேன்.
இத் திட்டத்தை அவர்கள் இருவரும் பாராட்டியிருந்தாலும் கொரோனா இடர்நிலைகளால் அத்திட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை.

தொப்புள் கொடி உறவாகக் காணப்படினும், இன்றளவும் இப் பிரச்சினை தீர்க்கப்படாமலுள்ளது.
இன்றும் ஒரு நம்பிக்கையுடனே ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம்.

அண்மையிலும் எமது ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த சந்திபபிலும் முடிவு காண்பதற்கான சாததியப்பாடுகள் உருவாக்கப்படும்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் இந்தியப்படகுகளுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதியளிக்கப்படவுள்ளமை தொடர்பாக பாராளுமன்றில்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே  அது ஆலோசனை மட்டுமே என வெளிவிவகார அமைச்சர் முன்வைத்திருந்தார். எது எவ்வாறாயினும் இவற்றின் இறுதி முடிவு கட்தொழில் அமைச்சரின் முடிவே இறுதியாகக் காணப்படும்.

இதனை அரசியலாக்கி இன்றைய கலந்துரையாடலை நிறுத்துமாறும் ஆயரிடம் கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.  பல தரப்பட்டவர்களால் தவறான முறையில் வதந்திகள் பரப்பப்படவுவதால் தான் இன்றைய  கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இரு தரப்பு மீனவர்களுக்குமிடையிலான புரிந்துணர்வுமிக்க கலந்துரையாடல். ஆகவே நான் கலந்துரையாடலில் நடுநிலையே வகிப்பேன் என்றார்.




இலங்கை- இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தையில் நடுநிலைமை வகிக்கத் தயார்- கச்சதீவில் அமைச்சர் டக்லஸ் உறுதிSamugamMedia வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு அந்தோனியர் ஆலய ஆலய உற்சவம் இன்று ஆரம்பமாகிறது.இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்தும் பல்வேறு பட்ட மக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இலங்கையிலிருந்தும் இன்று காலை ஏராளமானவர்கள் கச்சதீவுக்கு சென்றுள்ளனர்.இதேவேளை மறுபுறம் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் இருநாட்டு மீனவர்களும் கச்சதீவில் கலந்துரையாடவுள்ளனர்.இதன் ஒரு அங்கமாக சற்றுமுன் இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.இதேவேளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,இன்றைய தினம் காலங்காலமாக நிலவி வரும் இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க முனைவதற்கான கலந்துரையாடலில் இருதரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர். அண்மையிலும் ஊர்காவற்துறையில் 4 திருகோணமலையில் 2 படகுகள் விடுவிக்கப்பட்டது. ஏற்கனவே 2018 க்கு முதல் இலங்கைக் கடற்படையால் பிடிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட படகுகள் வழங்கப்பட்டன. நீண்ட காலமாக இங்கு இந்திய மீனவர்களின் பிடிபட்ட படகுகள் இங்கு இடத்தை ஆக்கிரமிப்பதாலும் டெங்கு போன்ற நோய் பரவுவதாலும் ; எரிபொருள் கடலில் கலப்பதாலும் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக இந்திய தரப்பிடம் எடுத்து கூறியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை2013 முதல்  2022 வரை இ்ந்தியாவின் 42 படகுகள் கைப்பற்றப்பட்டன. 37 படகுகளின் ஒரு சில படகுகள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது. ஏனைய ஒரு சில படகுகள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையதாக காணப்படுகிறது.அண்மையில் ஜெயசங்கர் மற்றும் இராஜாங்க அமைச்சர் முருகன் .மற்றும் விஜேபியை சேர்ந்த அண்ணாமலை போன்றோர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். அவர்கள் இரு நாட்டுக்கிடையிலும் நல்லெண்ண சமிக்ஞையாக 10 படகுகளை விடுவிக்குமாறு கோரினார்.  அதன் போது எமது பக்கத்திலிருந்து குறைந்தது 6 மாத காலத்திற்காவது இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்துமாறு நான் கோரிக்கை விடுத்தேன் எனவும் தெரிவித்தார்.2020 ம் ஆண்டு பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் டெல்லி சென்ற போது பிரதமர் மோடி மற்றும் ஜெய்சங்கரிடம் அறிக்கையொன்றை வழங்கினேன். இரு தரப்பு கடற்தொழில் பிரதிநிதிகள் மற்றும் துறைசாரோரை உள்ளடக்கி குழுவொன்றை அமைத்து வளங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான தீர்மனமொன்றை முன்வத்தேன்.இத் திட்டத்தை அவர்கள் இருவரும் பாராட்டியிருந்தாலும் கொரோனா இடர்நிலைகளால் அத்திட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை. தொப்புள் கொடி உறவாகக் காணப்படினும், இன்றளவும் இப் பிரச்சினை தீர்க்கப்படாமலுள்ளது. இன்றும் ஒரு நம்பிக்கையுடனே ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம்.அண்மையிலும் எமது ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த சந்திபபிலும் முடிவு காண்பதற்கான சாததியப்பாடுகள் உருவாக்கப்படும்.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் இந்தியப்படகுகளுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதியளிக்கப்படவுள்ளமை தொடர்பாக பாராளுமன்றில்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே  அது ஆலோசனை மட்டுமே என வெளிவிவகார அமைச்சர் முன்வைத்திருந்தார். எது எவ்வாறாயினும் இவற்றின் இறுதி முடிவு கட்தொழில் அமைச்சரின் முடிவே இறுதியாகக் காணப்படும். இதனை அரசியலாக்கி இன்றைய கலந்துரையாடலை நிறுத்துமாறும் ஆயரிடம் கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.  பல தரப்பட்டவர்களால் தவறான முறையில் வதந்திகள் பரப்பப்படவுவதால் தான் இன்றைய  கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இரு தரப்பு மீனவர்களுக்குமிடையிலான புரிந்துணர்வுமிக்க கலந்துரையாடல். ஆகவே நான் கலந்துரையாடலில் நடுநிலையே வகிப்பேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement