• May 03 2024

சவால்களை எதிர்கொள்ள தயார் - மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு..!!

Tamil nila / Apr 20th 2024, 8:42 pm
image

Advertisement

மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கும்,  கௌரவ ஆளுநர் அவர்களுக்கு ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில்  காணப்படும் இடர்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் கௌரவ ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது. சில பகுதிகளில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், பௌதீக வளப் பற்றாக்குறை பாரிய சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

நோயாளர்களின் உரிமைகளை பாதுகாத்து கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் காணப்படுவதாகவும், கொள்கைகளை பின்பற்றி அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார். மத்திய அரசாங்கதிடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார்.

மேலும் தரமான சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்து, அதனை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.



சவால்களை எதிர்கொள்ள தயார் - மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கும்,  கௌரவ ஆளுநர் அவர்களுக்கு ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில்  காணப்படும் இடர்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் கௌரவ ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது. சில பகுதிகளில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், பௌதீக வளப் பற்றாக்குறை பாரிய சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நோயாளர்களின் உரிமைகளை பாதுகாத்து கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் காணப்படுவதாகவும், கொள்கைகளை பின்பற்றி அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார். மத்திய அரசாங்கதிடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார்.மேலும் தரமான சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்து, அதனை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement