• Feb 03 2025

நாட்டிற்கு பாதுகாப்பான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயார்..! வில்சன் குவா

Chithra / Feb 3rd 2025, 7:41 am
image

 

நாட்டிற்கு மிகவும் பாதுகாப்பான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 2018 முதல் உள்நாட்டு சந்தையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், வாகனங்களை இறக்குமதி செய்து பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், கப்பல் தளம் மற்றும் கப்பல்துறைக்கான அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், சிறப்பு பாதுகாப்பு வசதிகள் இருப்பதாக வில்சன் குவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகன இறக்குமதி தளர்த்தப்பட்டதையடுத்து, மேலதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளமையால் புதிதாக இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் விலை அதிகரிக்கவுள்ளது.

வாகன இறக்குமதி மீது தாக்கம் செலுத்தும் பிரதான வரிகளில் சொகுசு வாகனங்கள் மீது விதிக்கப்படும் வரியே பிரதானமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிற்கு பாதுகாப்பான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயார். வில்சன் குவா  நாட்டிற்கு மிகவும் பாதுகாப்பான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 2018 முதல் உள்நாட்டு சந்தையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.இந்தநிலையில், வாகனங்களை இறக்குமதி செய்து பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், கப்பல் தளம் மற்றும் கப்பல்துறைக்கான அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், சிறப்பு பாதுகாப்பு வசதிகள் இருப்பதாக வில்சன் குவா தெரிவித்துள்ளார்.இதேவேளை, வாகன இறக்குமதி தளர்த்தப்பட்டதையடுத்து, மேலதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளமையால் புதிதாக இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் விலை அதிகரிக்கவுள்ளது.வாகன இறக்குமதி மீது தாக்கம் செலுத்தும் பிரதான வரிகளில் சொகுசு வாகனங்கள் மீது விதிக்கப்படும் வரியே பிரதானமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement