• Sep 23 2024

எல்லையற்ற உதவிகளை இலங்கைக்கு வழங்க தயார்..! சீனாவின் அறிவிப்பால் கடுப்பாகியுள்ள இந்தியா.!samugammedia

Sharmi / Jun 26th 2023, 4:08 pm
image

Advertisement

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீன அரசாங்கம் மீண்டும் உறுதி அளித்துள்ளது.

நாளை தொடக்கம், எதிர்வரும் 29ஆம் திகதி வரை சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள, சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர், அலி சப்ரி உள்ளிட்ட குழவினர் சீனாவை சென்றடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் Qin Gang  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு பெய்ஜிங்கில் இடம்பெற்றிருந்தது.

இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவியதில் இருந்து, இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதித்து, ஆதரித்ததாகவும், நட்பு பரிமாற்றங்கள் மற்றும் வெற்றிகரமான ஒத்துழைப்பின் அடிப்படையில் இரு தரப்பினரும் ஒரு முற்போக்கான முன்மாதிரியை அமைத்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.


அத்துடன் நாட்டின் தேசிய சுதந்திரம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு, சீன அரசாங்கம் மற்றும் சீன மக்கள் தன்னலமற்ற ஆதரவை வழங்குவதை பாராட்டுவதாகவும், கடன் பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை மிகவும் பாராட்டுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

எல்லையற்ற உதவிகளை இலங்கைக்கு வழங்க தயார். சீனாவின் அறிவிப்பால் கடுப்பாகியுள்ள இந்தியா.samugammedia இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீன அரசாங்கம் மீண்டும் உறுதி அளித்துள்ளது.நாளை தொடக்கம், எதிர்வரும் 29ஆம் திகதி வரை சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள, சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர், அலி சப்ரி உள்ளிட்ட குழவினர் சீனாவை சென்றடைந்துள்ளனர்.இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் Qin Gang  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு பெய்ஜிங்கில் இடம்பெற்றிருந்தது.இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவியதில் இருந்து, இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதித்து, ஆதரித்ததாகவும், நட்பு பரிமாற்றங்கள் மற்றும் வெற்றிகரமான ஒத்துழைப்பின் அடிப்படையில் இரு தரப்பினரும் ஒரு முற்போக்கான முன்மாதிரியை அமைத்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.அத்துடன் நாட்டின் தேசிய சுதந்திரம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு, சீன அரசாங்கம் மற்றும் சீன மக்கள் தன்னலமற்ற ஆதரவை வழங்குவதை பாராட்டுவதாகவும், கடன் பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை மிகவும் பாராட்டுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement