• Feb 14 2026

ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

shanuja / Dec 13th 2025, 10:32 pm
image

நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (14) வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. 


அந்த நிறுவனம் இன்று மாலை 4 மணிக்கு விடுத்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக, கண்டி மாவட்டத்துக்கும், குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய, இந்த அபாய எச்சரிக்கையானது, நாளை மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (14) வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் இன்று மாலை 4 மணிக்கு விடுத்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கண்டி மாவட்டத்துக்கும், குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த அபாய எச்சரிக்கையானது, நாளை மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement