• Nov 25 2024

அடுத்த 24 மணித்தியாலங்கள் குறித்து சிவப்பு எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Dec 1st 2023, 11:00 pm
image

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து  வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை   வெளியிட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழமான மற்றும் ஆழமற்ற  கடல் பகுதிகளில் செயற்படும் மீன்பிடி மற்றும் கடற் சமூகத்திற்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி 9.5 வடக்கு அட்சரேகை மற்றும் 86.0 கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகாமையில் திருகோணமலையில் இருந்து சுமார் 550 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது நாளை (02) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் (03) புயலாக வலுப்பெறவுள்ளது.

இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ம் திகதி வட தமிழக கடற்கரையை கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கிறது.

இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மேற்படி புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு கடற்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு அறிவித்துள்ளது

அடுத்த 24 மணித்தியாலங்கள் குறித்து சிவப்பு எச்சரிக்கை samugammedia பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து  வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை   வெளியிட்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழமான மற்றும் ஆழமற்ற  கடல் பகுதிகளில் செயற்படும் மீன்பிடி மற்றும் கடற் சமூகத்திற்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி 9.5 வடக்கு அட்சரேகை மற்றும் 86.0 கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகாமையில் திருகோணமலையில் இருந்து சுமார் 550 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.இது நாளை (02) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் (03) புயலாக வலுப்பெறவுள்ளது.இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ம் திகதி வட தமிழக கடற்கரையை கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கிறது.இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மேற்படி புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு கடற்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு அறிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement