யாழில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பணிக்கப்பட்டதால், நோய் தொற்று அதிகமாகி தாய் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த 25 வயதான இளம் தாய் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்ததாவது”
எமது பிள்ளையின் மரணம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறையிட்டோம்.
இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதாகவும்,
பிரசவம் நடந்து 48 நாட்களுக்குள் தாய் உயிரிழந்து உள்ளமையால், அதனை மறைத்து விட முடியாது. முழுமையான விசாரணை நடத்தப்படும்' என நம்பிக்கை தந்து எம்மை அனுப்பி வைத்தார்.
எனினும் மரண விசாரணை அதிகாரி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களுடன் நடந்து கொண்ட விடயம் அவர்களின் அணுகு முறை என்பனவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்திருந்தது.
குறிப்பாக பொலிஸ், வைத்திய தவறுகள் நடக்க சாத்தியமில்லை என கூறினார். எம்மிடம் விசாரணைகளை மேற்கொள்ளவோ, எம் தரப்பு கருத்தை கேட்கவோ அவர் விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட எமது குரலை அடக்கவே முயன்றார்.
சடலத்தை அடையாளம் காட்டி குறிப்புக்களை சொல்லும் போதும் அவர் அருகில் வரவில்லை. தூர நின்றே குறிப்பெடுத்தார்.
அதன் போது பிரேத அறையில் இருந்த ஊழியர்கள் கிட்ட வந்து சடலத்தை பார்த்து குறிப்பெடுங்கள் என அழைத்த போது, ஊழியர்களை மிரட்டி, தான் அருகில் வர தேவையில்லை என்றார்.
இதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திசாலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் கூறிய போது, அவரும் அது தொடர்பில் பணிப்பாளரிடம் முறையிடுங்கள், மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றியே தான் அறிக்கை தர முடியும் என்றார்.
பின்னர் சில மாதிரிகளை கொழும்புக்கு மேலதிக பரிசோதனைக்காக கொழுப்புக்கு அனுப்ப வேண்டும். அறிக்கை கிடைக்க இரண்டு கிழமைகளுக்கு மேலாகும் என்றார்.
இன்று தாய் இல்லாமல் இரு பிள்ளைகளும் தவித்து வருகின்றன.
வைத்தியசாலையில் இருந்து தாயையும் பிள்ளையையும் உடனே அழைத்து செல்லுங்கள் என கூறியதால் தான், உரிய சிகிச்சைகள் இன்றி தாய் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” இவ்வாறு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையின் அசமந்த போக்கே காரணம் - யாழில் இரட்டை குழந்தைகளின் தாயின் மரணம் தொடர்பில் உறவினர்கள் குற்றச்சாட்டு samugammedia யாழில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பணிக்கப்பட்டதால், நோய் தொற்று அதிகமாகி தாய் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த 25 வயதான இளம் தாய் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார்.இது குறித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்ததாவது” எமது பிள்ளையின் மரணம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறையிட்டோம். இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதாகவும், பிரசவம் நடந்து 48 நாட்களுக்குள் தாய் உயிரிழந்து உள்ளமையால், அதனை மறைத்து விட முடியாது. முழுமையான விசாரணை நடத்தப்படும்' என நம்பிக்கை தந்து எம்மை அனுப்பி வைத்தார்.எனினும் மரண விசாரணை அதிகாரி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களுடன் நடந்து கொண்ட விடயம் அவர்களின் அணுகு முறை என்பனவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்திருந்தது.குறிப்பாக பொலிஸ், வைத்திய தவறுகள் நடக்க சாத்தியமில்லை என கூறினார். எம்மிடம் விசாரணைகளை மேற்கொள்ளவோ, எம் தரப்பு கருத்தை கேட்கவோ அவர் விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட எமது குரலை அடக்கவே முயன்றார்.சடலத்தை அடையாளம் காட்டி குறிப்புக்களை சொல்லும் போதும் அவர் அருகில் வரவில்லை. தூர நின்றே குறிப்பெடுத்தார். அதன் போது பிரேத அறையில் இருந்த ஊழியர்கள் கிட்ட வந்து சடலத்தை பார்த்து குறிப்பெடுங்கள் என அழைத்த போது, ஊழியர்களை மிரட்டி, தான் அருகில் வர தேவையில்லை என்றார்.இதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திசாலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் கூறிய போது, அவரும் அது தொடர்பில் பணிப்பாளரிடம் முறையிடுங்கள், மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றியே தான் அறிக்கை தர முடியும் என்றார். பின்னர் சில மாதிரிகளை கொழும்புக்கு மேலதிக பரிசோதனைக்காக கொழுப்புக்கு அனுப்ப வேண்டும். அறிக்கை கிடைக்க இரண்டு கிழமைகளுக்கு மேலாகும் என்றார்.இன்று தாய் இல்லாமல் இரு பிள்ளைகளும் தவித்து வருகின்றன. வைத்தியசாலையில் இருந்து தாயையும் பிள்ளையையும் உடனே அழைத்து செல்லுங்கள் என கூறியதால் தான், உரிய சிகிச்சைகள் இன்றி தாய் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” இவ்வாறு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.