• May 03 2024

வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

Sharmi / Dec 7th 2022, 3:30 pm
image

Advertisement

மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ம் திகதி வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியினை முன்னெடுக்கவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் தெரிவிக்கையில், 

மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

குறித்த பேரணியினை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இணைந்து வடக்கு கிழக்கில்  முன்னெடுக்கவுள்ளனர். 

இதன்படி கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு கல்லடி பாலத்திலே பேரணி ஆரம்பிக்கப்பட்டு காந்தி பூங்காவிலே முடிவடையவுள்ளது.

அதேபோன்று வடக்கிலே அனைத்து மாவட்டங்களையும், உள்ளடக்கியதாக வவுனியா கந்தசுவாமி கோவிலிலே பேரணி ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியினூடாக பழையபேருந்து நிலையத்தில் முடிவடைகின்றது.

இப்பேரணிக்கு  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், வர்த்தகர்கள், தமிழ் தேசியத்தினை நேசிக்கும் அரசியல்கட்சிகள், பல்கலைக்கழ மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலகர்கள், கலந்துகொண்டு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ம் திகதி வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியினை முன்னெடுக்கவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில், மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பேரணியினை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இணைந்து வடக்கு கிழக்கில்  முன்னெடுக்கவுள்ளனர். இதன்படி கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு கல்லடி பாலத்திலே பேரணி ஆரம்பிக்கப்பட்டு காந்தி பூங்காவிலே முடிவடையவுள்ளது.அதேபோன்று வடக்கிலே அனைத்து மாவட்டங்களையும், உள்ளடக்கியதாக வவுனியா கந்தசுவாமி கோவிலிலே பேரணி ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியினூடாக பழையபேருந்து நிலையத்தில் முடிவடைகின்றது.இப்பேரணிக்கு  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், வர்த்தகர்கள், தமிழ் தேசியத்தினை நேசிக்கும் அரசியல்கட்சிகள், பல்கலைக்கழ மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலகர்கள், கலந்துகொண்டு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement