கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் (03) இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்,
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
திறைசேரியில் இருந்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களில் ஏற்பட்ட மோசமான வானிலையால் நாட்டின் 24 மாவட்டங்களில் 139,439 குடும்பங்களைச் சேர்ந்த 469,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 18 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - அரசு விசேட கவனம் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் (03) இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்,அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.திறைசேரியில் இருந்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கடந்த சில நாட்களில் ஏற்பட்ட மோசமான வானிலையால் நாட்டின் 24 மாவட்டங்களில் 139,439 குடும்பங்களைச் சேர்ந்த 469,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 18 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.