• Nov 25 2024

கிளிநொச்சி டிப்போ சந்தியில் வீதிச்சமிக்ஞை விளக்குகளை பொருத்த கோரிக்கை..!samugammedia

Tharun / Jan 30th 2024, 12:50 pm
image

இலங்கை முழுவதிலும் குறிப்பாக வடபகுதியில் வீதி விபத்துக்கள் அதிகரிக்குள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும். அந்தவகையில் கிளிநொச்சி பகுதிகளில் அதிகளவான விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


அத்துடன் விபத்திற்கான காரணங்களைக் இனங்கண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி விபத்தினால் ஏற்படும் அவலங்களை தடுக்கும் முயற்சியில் கத்தோலிக்க திருச்சபையின் வடமாகாண அமலமரித் தியாகிகளின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் ஈடுபட்டு வருகின்றது. 

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நாற்சந்தியாகிய டிப்போ சந்தியில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படாமல் இருப்பதும் மிகப் பெரிய குறைபாடாக கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் பஸ்நிலையம், பிரதான சந்தை. பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களை நாடிச்செல்லும் மக்கள் பாவனையிலுள்ள மிகப்பிரதான சந்தியில் மக்களின் நலன்கருதி இவ்வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாகவுள்ளது. 


இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி மக்களின் பாதுகாப்பினையும், ஆரோக்கியமான வாழ்வையும் முன்னிட்டு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உரிய தரப்பினருக்கு விரைவில் விண்ணப்பிக்கவுள்ளதாக சமாதானத்துக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் இயக்குநர் அருட்தந்தை யா.றமேஸ் அ.ம.தி அடிகளார் தெரிவித்துள்ளார். அத்துடன் வீதி விபத்துக்களினால் ஏற்படும் அவலங்களை தடுக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவும்  அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் வீதிச்சமிக்ஞை விளக்குகளை பொருத்த கோரிக்கை.samugammedia இலங்கை முழுவதிலும் குறிப்பாக வடபகுதியில் வீதி விபத்துக்கள் அதிகரிக்குள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும். அந்தவகையில் கிளிநொச்சி பகுதிகளில் அதிகளவான விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விபத்திற்கான காரணங்களைக் இனங்கண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி விபத்தினால் ஏற்படும் அவலங்களை தடுக்கும் முயற்சியில் கத்தோலிக்க திருச்சபையின் வடமாகாண அமலமரித் தியாகிகளின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நாற்சந்தியாகிய டிப்போ சந்தியில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படாமல் இருப்பதும் மிகப் பெரிய குறைபாடாக கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் பஸ்நிலையம், பிரதான சந்தை. பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களை நாடிச்செல்லும் மக்கள் பாவனையிலுள்ள மிகப்பிரதான சந்தியில் மக்களின் நலன்கருதி இவ்வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாகவுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி மக்களின் பாதுகாப்பினையும், ஆரோக்கியமான வாழ்வையும் முன்னிட்டு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உரிய தரப்பினருக்கு விரைவில் விண்ணப்பிக்கவுள்ளதாக சமாதானத்துக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் இயக்குநர் அருட்தந்தை யா.றமேஸ் அ.ம.தி அடிகளார் தெரிவித்துள்ளார். அத்துடன் வீதி விபத்துக்களினால் ஏற்படும் அவலங்களை தடுக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவும்  அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement