• Dec 14 2024

கனடாவில் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள்!

Tamil nila / Nov 16th 2024, 6:53 pm
image

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கனடா தபால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இதில் சுமார் 55,000 பேர் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 6 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப அதிக ஊதியம் கோரி வருகின்றனர்.

சேவைக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளில் தபால் ஊழியர்களுக்கு 11.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனினும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இது போதாது எனக் கூறப்படுகிறது. அவர்கள் 22 சதவீத ஊதிய உயர்வு கோருகின்றனர்


கனடாவில் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கனடா தபால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இதில் சுமார் 55,000 பேர் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 6 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப அதிக ஊதியம் கோரி வருகின்றனர்.சேவைக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளில் தபால் ஊழியர்களுக்கு 11.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.எனினும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இது போதாது எனக் கூறப்படுகிறது. அவர்கள் 22 சதவீத ஊதிய உயர்வு கோருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement