• Sep 20 2024

துருக்கிய நில நடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்!

Tamil nila / Feb 7th 2023, 8:35 am
image

Advertisement

துருக்கியை உலுக்கிய பூகம்பத்தால் 3500 ற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதுடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.


அதேபோன்று பலர் வீடு வாசல்களை இழந்து மீண்டும் பூகம்பம் வருமோ என்ற அச்சத்துடன் உள்ளனர்.


இந்த நிலையில் துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே ஆராய்ச்சியாளர் ஒருவர் கணித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


 

நெதர்லாந்தை சேர்ந்த ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி இப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை துல்லியமாக கணித்திருக்கின்றார்.


SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கூடிய விரைவாகவோ அல்லது தாமதமாகவோ மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும்." என்று பதிவிட்டுள்ளார். 

துருக்கிய நில நடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர் துருக்கியை உலுக்கிய பூகம்பத்தால் 3500 ற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதுடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.அதேபோன்று பலர் வீடு வாசல்களை இழந்து மீண்டும் பூகம்பம் வருமோ என்ற அச்சத்துடன் உள்ளனர்.இந்த நிலையில் துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே ஆராய்ச்சியாளர் ஒருவர் கணித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி இப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை துல்லியமாக கணித்திருக்கின்றார்.SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கூடிய விரைவாகவோ அல்லது தாமதமாகவோ மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும்." என்று பதிவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement