• Sep 09 2026

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் படுகொலை – மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி!

Chithra / Sep 8th 2026, 11:02 am
image


கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த குற்றச் சம்பவம் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வந்தது.


இதன்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றச் செயலுக்கு சதி செய்தல் மற்றும் அதற்கு துணைபுரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வந்த உயிரிழந்தவரின் மனைவி நேற்று (07) பிற்பகல் கிரிந்திவெல, நரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய பெண் எனவும், அவர் குறித்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் படுகொலை – மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த குற்றச் சம்பவம் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வந்தது.இதன்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றச் செயலுக்கு சதி செய்தல் மற்றும் அதற்கு துணைபுரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வந்த உயிரிழந்தவரின் மனைவி நேற்று (07) பிற்பகல் கிரிந்திவெல, நரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய பெண் எனவும், அவர் குறித்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement