2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “அருகிலுள்ள பாடசாலைகளில் சிறந்த பாடசாலை” (NSBS) திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு நடத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (07) உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
நாங்கள் தற்போது திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளை மதிப்பாய்வு செய்து வருகிறோம்.
இவற்றில் பல பாடசாலைகளில் ஓரளவு மாத்திரமே திட்டங்கள் முடிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே, இந்தப் பாடசாலைகள் அனைத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்து வருகிறோம்.
எங்கள் திட்டத்தின்படி, 3-கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து சிறுவர்களும் கல்வி கற்க ஒரு ஆரம்பப் பாடசாலையையும்,
இதுபோன்ற பல பாடசாலைகளையும் சேர்ப்பதன் மூலம் முழு வசதியுள்ள மேல்நிலைப் பாடசாலையையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
90% பணிகள் நிறைவடைந்துள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார்.
பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு - பிரதமரின் புதிய திட்டம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “அருகிலுள்ள பாடசாலைகளில் சிறந்த பாடசாலை” (NSBS) திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு நடத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று (07) உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.நாங்கள் தற்போது திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளை மதிப்பாய்வு செய்து வருகிறோம்.இவற்றில் பல பாடசாலைகளில் ஓரளவு மாத்திரமே திட்டங்கள் முடிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.எனவே, இந்தப் பாடசாலைகள் அனைத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்து வருகிறோம்.எங்கள் திட்டத்தின்படி, 3-கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து சிறுவர்களும் கல்வி கற்க ஒரு ஆரம்பப் பாடசாலையையும், இதுபோன்ற பல பாடசாலைகளையும் சேர்ப்பதன் மூலம் முழு வசதியுள்ள மேல்நிலைப் பாடசாலையையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.90% பணிகள் நிறைவடைந்துள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார்.