• May 13 2025

பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளில் திருத்தம் - வர்த்தக அமைச்சு எடுத்த தீர்மானம்

Chithra / Nov 8th 2024, 9:32 am
image


ரூபாவின் பெறுமதி வலுப்படுத்தப்பட்டமையை கருத்தில் கொண்டு, பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருட்களின் விலை குறைப்பு சதவீதம் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மக்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ரூபாய் மதிப்பு வலுப்பெற்றதையும், மூலப்பொருள் விலை குறைப்பையும் பயன்படுத்தி பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்கள் மக்களுக்கு உரிய விலையை வழங்குகிறார்களா என்பது குறித்து தற்போது ஆராயப்படுகிறது.

அதேநேரம், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து விலை குறைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.  

பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளில் திருத்தம் - வர்த்தக அமைச்சு எடுத்த தீர்மானம் ரூபாவின் பெறுமதி வலுப்படுத்தப்பட்டமையை கருத்தில் கொண்டு, பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.பொருட்களின் விலை குறைப்பு சதவீதம் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மக்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.ரூபாய் மதிப்பு வலுப்பெற்றதையும், மூலப்பொருள் விலை குறைப்பையும் பயன்படுத்தி பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்கள் மக்களுக்கு உரிய விலையை வழங்குகிறார்களா என்பது குறித்து தற்போது ஆராயப்படுகிறது.அதேநேரம், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து விலை குறைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement

Buy Now