• Jan 23 2025

வரிகள் செலுத்தப்படாமையால் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள அரிசி!

Chithra / Dec 6th 2024, 9:06 am
image

 

தேவையான வரிகள் செலுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் இருப்பு நான்கு மணித்தியாலங்களுக்குள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், 

இந்த நடவடிக்கைகள் இறக்குமதி செயன்முறையை சீர்செய்வதையும், உள்ளூர் சந்தைக்கு அரிசி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இறக்குமதியாளர்கள் பொருந்தக்கூடிய கடமைகளைத் தீர்ப்பதன் மூலம் பொருட்களை விடுவிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுமார் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அருக்கொட தெரிவித்துள்ளார்.  

இதற்காக 2,500 முதல் 3,000 அரிசி கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

வரிகள் செலுத்தப்படாமையால் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள அரிசி  தேவையான வரிகள் செலுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் இருப்பு நான்கு மணித்தியாலங்களுக்குள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த நடவடிக்கைகள் இறக்குமதி செயன்முறையை சீர்செய்வதையும், உள்ளூர் சந்தைக்கு அரிசி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.எனவே, இறக்குமதியாளர்கள் பொருந்தக்கூடிய கடமைகளைத் தீர்ப்பதன் மூலம் பொருட்களை விடுவிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.சுமார் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அருக்கொட தெரிவித்துள்ளார்.  இதற்காக 2,500 முதல் 3,000 அரிசி கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement