• Jan 14 2025

வானளவில் உயர்வடைந்த உணவு பொருட்களின் மாபியாக்களின் செயற்பாடு - அம்பலப்படுத்திய எம்.பி

Chithra / Dec 6th 2024, 9:20 am
image

 

அத்தியாவசிய உணவு பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரையாற்றுகையில்,

குரங்குகள் தேங்காய்களை உண்பதால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது. 

அவ்வாறாயின் கடந்த ஆண்டு நாட்டில் குரங்குகள் வாழவில்லையா? தேங்காய்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மை.

அத்தியாவசிய உணவு பொருட்களின் மாபியாக்களின் செயற்பாடு வானளவில் உயர்வடைந்துள்ளது. மாபியாக்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

ஆட்சிக்கு வருவதற்காக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட வாக்குறுதிகளை நினைவுப்படுத்த வேண்டும்.

வற் வரியில் இருந்து சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளை நீக்குவதாகவும், வரி சலுயை 15 சதவீதமாக குறைப்பதாகவும், உணவு பொருட்களின் விலையை குறைப்பதாகவும்  குறிப்பிட்டது.

நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

நாட்டில் கடந்த வாரம் நிலவிய மழையுடனான காலநிலையால் பெருமளவிலான விவசாய நிலங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

விவசாயிகள் 70 ஆயிரத்துக்கும் அதிகளவில் செலவழித்துள்ள நிலையில் 40 ஆயிரம் ரூபா வழங்குவது எந்தளவுக்கு நியாயமானது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வானளவில் உயர்வடைந்த உணவு பொருட்களின் மாபியாக்களின் செயற்பாடு - அம்பலப்படுத்திய எம்.பி  அத்தியாவசிய உணவு பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் உரையாற்றுகையில்,குரங்குகள் தேங்காய்களை உண்பதால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் கடந்த ஆண்டு நாட்டில் குரங்குகள் வாழவில்லையா தேங்காய்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மை.அத்தியாவசிய உணவு பொருட்களின் மாபியாக்களின் செயற்பாடு வானளவில் உயர்வடைந்துள்ளது. மாபியாக்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.ஆட்சிக்கு வருவதற்காக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட வாக்குறுதிகளை நினைவுப்படுத்த வேண்டும்.வற் வரியில் இருந்து சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளை நீக்குவதாகவும், வரி சலுயை 15 சதவீதமாக குறைப்பதாகவும், உணவு பொருட்களின் விலையை குறைப்பதாகவும்  குறிப்பிட்டது.நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.நாட்டில் கடந்த வாரம் நிலவிய மழையுடனான காலநிலையால் பெருமளவிலான விவசாய நிலங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விவசாயிகள் 70 ஆயிரத்துக்கும் அதிகளவில் செலவழித்துள்ள நிலையில் 40 ஆயிரம் ரூபா வழங்குவது எந்தளவுக்கு நியாயமானது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement