ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கு இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது.
இந்த போட்டியில் கிரிக்கெட் வர்ணனை ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பாவன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டி வர்ணனையின்போது பேசிக்கொண்டிருந்த ரிக்கி பாண்டிங்குக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிக்கி பாண்டிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணியில் மறக்க முடியாத வீரரும் பல சாதனைகளை தன் வசம் வைத்திருக்கக்கூடிய வீரருமான ரிக்கி பாண்டிங் உடல் நிலை குறைபாடு ஏற்பட்டிருப்பது அவரின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிக்கி பாண்டிங்-க்கு திடீர் நெஞ்சு வலி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கு இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது.இந்த போட்டியில் கிரிக்கெட் வர்ணனை ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பாவன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் டெஸ்ட் போட்டி வர்ணனையின்போது பேசிக்கொண்டிருந்த ரிக்கி பாண்டிங்குக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிக்கி பாண்டிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஆஸ்திரேலியா அணியில் மறக்க முடியாத வீரரும் பல சாதனைகளை தன் வசம் வைத்திருக்கக்கூடிய வீரருமான ரிக்கி பாண்டிங் உடல் நிலை குறைபாடு ஏற்பட்டிருப்பது அவரின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.