• Dec 23 2024

ரோஹிங்யர்களை நேரில் சென்று நலர்களை விசாரித்த ரிசாட் எம்.பி!

Tamil nila / Dec 21st 2024, 7:21 pm
image

மியன்மார் ரோகிங்யர்கள் திருகோணமலை தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களின் நலன்களை விசாரிக்கவும் அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் இன்று (21)குறித்த பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 

நேற்று திருகோணமலை அஷ்ரப் துறை முகத்தை வந்தடைந்த குறித்த படகில் 115 நபர்களில் மாலுமிகள் உட்பட அதன் உதவியாளர்கள் 12 நபர்களை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ததை அடுத்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

தற்காலிகமாக குறித்த பாடசாலையில் தங்க வைத்து இன்றைய தினம் நுகேகொட மிரிகானையில் உள்ள அகதிகள் தங்கு மிடத்துக்கு அழைத்து செல்லப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை இதன் காரணமாக மீண்டும் கந்தளாய் வரை சென்று குறித்த பாடசாலைக்கு அழைத்து சென்றனர்.

இதன் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன் ஒரு தொகை அத்திதவசிய பொருட்களை றிசாட் பதியுதீன் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளரிடம் கையளித்தார். 

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட றிசாட் பதியுதீன் மியன்மார் அகதிகளை திருகோணமலைக்கு அவர்களின் விடயங்களை ஆராய்ந்து உதவிகளை வழங்கியுள்ளோம் என்றாலும் பொலிஸாரின் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேரடியாக சென்று பார்வையிட முடியாது என அரசாங்கம் சொல்வதாக சொன்னார்கள் இருந்த போதிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான உறங்குவதற்கான வசதிகளை செய்துள்ளோம் இது போன்று திருகோணமலை வர்த்தக சங்கமும் பல உதவிகளை செய்துள்ளனர் என்றார்.

ரோஹிங்யர்களை நேரில் சென்று நலர்களை விசாரித்த ரிசாட் எம்.பி மியன்மார் ரோகிங்யர்கள் திருகோணமலை தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நலன்களை விசாரிக்கவும் அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் இன்று (21)குறித்த பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். நேற்று திருகோணமலை அஷ்ரப் துறை முகத்தை வந்தடைந்த குறித்த படகில் 115 நபர்களில் மாலுமிகள் உட்பட அதன் உதவியாளர்கள் 12 நபர்களை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ததை அடுத்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.தற்காலிகமாக குறித்த பாடசாலையில் தங்க வைத்து இன்றைய தினம் நுகேகொட மிரிகானையில் உள்ள அகதிகள் தங்கு மிடத்துக்கு அழைத்து செல்லப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை இதன் காரணமாக மீண்டும் கந்தளாய் வரை சென்று குறித்த பாடசாலைக்கு அழைத்து சென்றனர்.இதன் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன் ஒரு தொகை அத்திதவசிய பொருட்களை றிசாட் பதியுதீன் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளரிடம் கையளித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட றிசாட் பதியுதீன் மியன்மார் அகதிகளை திருகோணமலைக்கு அவர்களின் விடயங்களை ஆராய்ந்து உதவிகளை வழங்கியுள்ளோம் என்றாலும் பொலிஸாரின் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேரடியாக சென்று பார்வையிட முடியாது என அரசாங்கம் சொல்வதாக சொன்னார்கள் இருந்த போதிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான உறங்குவதற்கான வசதிகளை செய்துள்ளோம் இது போன்று திருகோணமலை வர்த்தக சங்கமும் பல உதவிகளை செய்துள்ளனர் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement