• Nov 22 2024

மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் போகும் அபாயம்! ஆந்திராவில் பரவி வரும் புதிய வகைக் காய்ச்சல்!

Tamil nila / Aug 7th 2024, 8:15 pm
image

இந்தியா, ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் வித்தியாசமான அறிகுறிகளுடன் புதிய வகை காய்ச்சல் பரவி வருகின்றது.

எவ்வாறெனில் சிக்கன் குனியாவைப் போன்ற இந்த காய்ச்சலுக்கு ஆர்போ வகையைச் சேர்ந்த வைரஸ்தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை,கால்கள் வீங்கி,மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் போவதாக கூறப்படுகிறது.

குடும்பத்தில் ஒருவருக்கு இந்தக் காய்ச்சல் வந்தாலும் வீட்டிலுள்ள ஏனையோருக்கும் பரவுவதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

4 நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்தாலும் கை,கால் வீக்கமும் மூட்டு வலியும் குறையவில்லை எனவும் 6 வாரங்களுக்கு வலி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காய்ச்சலினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினரால் மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக  புதிய வகை காய்ச்சல் பரவி வருகின்றமை ஆந்திர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் போகும் அபாயம் ஆந்திராவில் பரவி வரும் புதிய வகைக் காய்ச்சல் இந்தியா, ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் வித்தியாசமான அறிகுறிகளுடன் புதிய வகை காய்ச்சல் பரவி வருகின்றது.எவ்வாறெனில் சிக்கன் குனியாவைப் போன்ற இந்த காய்ச்சலுக்கு ஆர்போ வகையைச் சேர்ந்த வைரஸ்தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை,கால்கள் வீங்கி,மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் போவதாக கூறப்படுகிறது.குடும்பத்தில் ஒருவருக்கு இந்தக் காய்ச்சல் வந்தாலும் வீட்டிலுள்ள ஏனையோருக்கும் பரவுவதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.4 நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்தாலும் கை,கால் வீக்கமும் மூட்டு வலியும் குறையவில்லை எனவும் 6 வாரங்களுக்கு வலி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் காய்ச்சலினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினரால் மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.குறிப்பாக  புதிய வகை காய்ச்சல் பரவி வருகின்றமை ஆந்திர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement