முல்லைத்தீவு நைனமடு பகுதியில் 50 மில்லிமீட்டருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக முத்தையன்கட்டு குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முல்லைத்தீவு பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குளத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் அவதானமாக இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் அபாயம் முல்லைத்தீவு நைனமடு பகுதியில் 50 மில்லிமீட்டருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் காரணமாக முத்தையன்கட்டு குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முல்லைத்தீவு பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குளத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் அவதானமாக இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.